யாழ். பொலிஸாரின் விசேட நடவடிக்கை - பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாரினால் நகர் பகுதிகளில் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 10 பேரில் பாடசாலை மாணவனும் உள்ளடங்குவதாகவும் , கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment