கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள்!!


ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது. கூகுள் மேப்ஸ் பயனர்களை கவரும் வகையிலும் போட்டியை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது தனது மேப்ஸ்களில் புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் சில அப்டேட்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

* கூகுளின் ஜெமினி ஏஐயுடன் மேப்ஸ் தற்போது நேரடியாக ஒருங்கிணைப்பதால், பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.

* கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்ஸ்களை வழங்க தொடங்கியுள்ளது.

* டூ வீலர் ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கியுள்ளது.

* சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயனர்கள், கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

* விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.

போன்ற விடயங்கள் உள்ளடகப்பட்டுள்ளன. 

# google map

No comments