உள்வீடாயினும் சிறைதான்!
ஹெரோயினுடன் நேற்று(05) கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பிரமுகரது கணவன் மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
எப்பாவல கட்டியாவ அதிபர் மற்றும் அவருடைய மகனை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தனது கணவரும் மகனும் கைது செய்யப்பட்டதை அடுத்து, தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகர சபை உறுப்பினரான டிஸ்னா நிரஞ்சல குமாரி பதவி விலகியுள்ளார்.
ஐகதான முக்கிய சந்தேக நபர் அனுராதபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைவராகவும், தன்னார்வத்துடன் அதிபராகப் பணியாற்றி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் எப்பாவல, எட்டகல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ கிராம், ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சில நாட்களுக்கு முன்பு அதிபரின் மகனும்; ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

Post a Comment