யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் கலட்டி பகுதியில் மூன்று இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட வேளை அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் எனவும் , மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்னர்.

Post a Comment