'துருவேறும் கைவிலங்கு' நூலறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெற்ற செயலூக்கத் தொகை, சக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ...
தமிழ் அரசியல் கைதி'யாக 16 ஆண்டுகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸின், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் ஆவண நூலின் ஆய்வறிமுக நிகழ்வானது, அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இடம்பெற்றிருந்தது.
" நூல் அறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெறுகின்ற ஊக்கத்தொகை முழுவதும், மீதமுள்ள சக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செயற்பாட்டிற்கு உதவ வேண்டும் " என்கின்ற, நூலாசிரியரின் நன் நோக்கிற்கு அமைய, நிகழ்வரங்கில் தேறிய நிதித் தொகையை கிளிநொச்சி-விவேகானந்தநகரில் உள்ள அவரின் தாயாரான செல்லையா பவளவள்ளி , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக செயற்பட்டு வருகின்ற, 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திரு.மு.கோமகன் மற்றும் செயற்பாட்டாளர் போ.அருள்வந்தனா ஆகியோரிடம் கையளித்துள்ளார்.
இதேபோன்று, இந்நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வானது, 2023ஆம் ஆண்டு நோர்வே தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றிருந்தபோது கிடைக்கப்பெற்ற ஊக்கத்தொகையும் கூட, 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் செயலூக்கத்திற்காக கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment