நீங்கள் கதைப்பது என்றால் நாங்கள் போகிறோம் - சிறீதரன்
காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள்.நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை (06) மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு மக்களின் விடுவிப்பு தொடர்பில் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் மட்டும் 4000 மக்களுக்கு காணியில்லை. அதேபோன்று யாழ்ப்பாணத்திலும் 13000 மக்களுக்கு காணியில்லை.
வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களுக்கு முதலீட்டுக்கு வழங்காமல் மக்கள் குடியிருக்க காணிகளை விடுவியுங்கள் என்றார்.

Post a Comment