ரணில் வெளியே செல்லமுடியாது?
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவர் மீதான பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்;.
சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலான கோரிக்கை புதன்கிழமை (19) அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், செயலாளரின் சார்பாக பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை மீளப் பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். அதன்படி, பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க மருத்துவ காரணங்களை முன்னிறுத்தி பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment