நம்பாதீர்கள்:ரஜீவன்!



முகநூல் வழி தன் மீது போலிக்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதாக அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்த படம் எடிட் செய்யப்பட்டு பொய்யாக காட்டப்பட்டுள்ளது. உங்கள் முகநூலில் அல்லது பிற சமூக ஊடகங்களில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பகிரும் முன் எது உண்மையென உறுதிசெய்கவென கோரிக்கை விடுத்துள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்.

இத்தகைய தவறான தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிலர் போலித் தகவல்கள் பயன்படுத்தி பல போலி ஐடிகளை உருவாக்கி குடும்பச் சம்பந்தமான விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றனர் — இதுபற்றி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள உள்ளேன்.

தயவு செய்து இதனை பகிராதீர்கள் மற்றும் போலி கணக்குகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் நிரூபணங்களுடன் எனக்கு தகவல் அனுப்புமாறும் ரஜீவன் கோரிக்கைவிடுத்துள்ளார்.


No comments