இந்தியாவின் கதை:கண்டுகொள்ளாத இலங்கை!



இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி  என இந்திய அரசு அவிழ்த்துவிட்டுள்ள புரளிபற்றி அலட்டிக்கொள்ளப்போவதில்லையென இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்  இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,  இந்திய உளவுப்பிரிவின் தகவல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

தாவூத் இப்ராஹிம் குழு, தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் புதிய கதைகளை அவிழ்த்து விடுத்துள்ளது.

இந்திய பின்னணி போதைப்பொருள் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை முடக்கும் வகையில் புதிய கதைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments