வர்த்தக நிலையங்களை மூடுமாறு கோரிக்கை!
மாவீர செல்வங்களிற்கு மதிப்பளிக்கும் வகையில் எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை வடகிழக்கில் வர்த்தக நிலையங்களை பிற்பகல் மூடுமாறு தமிழ் பல தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
அதேவேளை, வடக்கு கிழக்கில் நாளைய தினம் (27.11.2025) அனுஸ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டும் புரட்சி கானங்கள் ஒலிக்கப்பட்டும் வருகின்றது.
இதனிடையே நாளைய தினம் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் இடைநிறுத்தி நினைவேந்தலில் பங்கெடுக்க அனைவரிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..
அன்றைய தினம் சந்தைகள் இயங்காதெனவும் இறைச்சிக்கடைகளும் முடங்கியிருக்குமென தெரிவித்துள்ளார்.
அதேவேளை அன்றைய தினம் மதுச்சாலைகள் மற்றும் தவறணைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களும் மூடி ஒத்துழைப்பு வழங்குவதுடன் பணியாளர்கள் துயிலுமில்லங்களிற்கு செல்ல ஒத்துழைப்பு வழங்க கோரியுள்ளார்.
குறிப்பாக களியாட்ட நிகழ்வுகள் அனைத்தையும் நிறுத்தி பொது மைதானங்களில் போட்டிநிகழ்வுகளை தவிர்க்கவும் கோரப்பட்டுள்ளது.

Post a Comment