யாழில். தவறணையில் தகராறு - ஒருவர் அடித்துக்கொலை


யாழ்ப்பாணத்தில் தவறணையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யபப்ட்டுள்ளார். 

அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா யோகதாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 18ஆம் திகதி தவறணையில் கள்ளு அருந்தும் போது, இரு இளைஞர்களுக்கும் குறித்த நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறியுள்ளது. 

அதன் போது இரு இளைஞர்களும் கடுமையாக தாக்கியதில் , படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் , இருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள சுன்னாகம் பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments