கடுகண்ணாவையில் பாரிய மண்சரிவு ; மண்ணுக்குள் அகப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!


கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தவர்களும் கடையில் இருந்தவர்களும் பாறைக்கு அடியில் சிக்கிய நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மண்சரிவில் சிக்கியுள்ள ஏனையவர்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பாரிய கல்லுடன் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments