நாவாந்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர், உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.




Post a Comment