கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால் , துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் , துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
ஈகைச்சுடரினை , இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.





Post a Comment