பெற்றோருக்காக திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்போருக்கு ஓய்வூதியம்




திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன நேற்று  தெரிவித்துள்ளார்.

வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு சிறப்பு விடயம் எனவும், இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments