ஏழு பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்: பெரும் ஆரவாத்தில் இஸ்ரேல்!

பெரும் ஆரவாத்துடன் பணயக் கைதிகளை வரவேற்றும் இஸ்ரேலிய மக்கள்
காசாவில் ஹமாசால் பணயக் கைதிகளாக வைத்திருந்தவர்களில் ஏழு பேர் முதல் கட்டமாக இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

காசா பகுதியில் இருந்து திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட ஏழு பணயக்கைதிகள் இப்போது இஸ்ரேலுக்குள் நுழைந்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 

விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேலிய பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாகவும், அங்கு அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் இஸ்ரேலிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு ஒரு இராணுவ தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.

பணயக்கைதிகள் இப்போது இஸ்ரேலிய காவலில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஏழு பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் இஸ்ரேல் பரவி மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.

நாடு முழுவதும் பொது திரையிடல்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த இடமாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், டெல் அவிவின் பணயக்கைதிகள் சதுக்கத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது.

தெற்கு காசாவில் காலை 10 மணிக்கு உயிருடன் இருக்கும் பயணக் கைதிகளின் இரண்டாவது குழு விடுவிக்கப்படும் என அல் ஜசீராவின் அரபு மொழி வலையமைப்பு செய்தி வெளியிட்டது.

பணயக் கைதிகளை ஏற்றிச் செல்லும் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்கள்


Seven Israeli hostages # Gaza # Israle 






No comments