போர் முடிவுக்கு வந்துவிட்டது - டிரம்ப்
எகிப்தின் சுற்றுலா நகரமான ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் அமைதி உச்சிமாநாட்டிற்குச் செல்லும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , காசாவில் போர் முடிந்துவிட்டதாக உறுதியளித்துள்ளார்.
ஹமாஸுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறவில்லை என்று ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் இருந்த ஒரு நிருபர் சுட்டிக்காட்டியதற்கு பதிலளிக்கும் போது டிரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
போர் முடிந்துவிட்டது என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். அது உங்களுக்கு அது புரிகிறதா? என்று கேள்வியையும் எழுப்பினார்.
போர் நிறுத்தம் நீடிக்கும் என்று தான் நம்புவதாக டிரம்ப் தொடர்ந்து கூறினார். மக்கள் சோர்வாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
# Donald Trump
Post a Comment