வியற்நாமில் வெள்ளம்: 13 பேர் உயிரிழப்பு!
வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 11 பேரைக் காணவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நாட்டின் மத்தியப் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இது ஹியூ மற்றும் ஹோய் ஆன் நகரங்களை கடுமையாக பாதித்துள்ளது.
இருப்பினும், நீர்மட்டம் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment