போர்க்குற்றங்களுக்காக ஐ.சி.சி.யால் டார்பூர் போராளிக்குழு தலைவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பு
சூடானின் டார்பூர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்க்குற்றங்களுக்காக ஒரு போராளிக்குழுத் தலைவரை ஐ.சி.சி முதல் முறையாகக் குற்றவாளியாகக் கண்டறிந்துள்ளது.
சூடானின் டார்பூர் பகுதியில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த மோதலின் போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக முன்னாள் போராளித் தலைவர் அலி முகமது அலி அப்துல்-ரஹ்மானை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) திங்களன்று குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
அந்த நேரத்தில் ஜன்ஜாவீத் போராளிக் குழுக்களில் மூத்த தளபதியாக இருந்த அப்துல்-ரஹ்மான், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரின் அரசாங்கத்திடமிருந்து கடுமையான பழிவாங்கலை எதிர்கொண்ட டார்பூரில் 300,000 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் 2.7 மில்லியன் பேர் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டனர் .
அல்-பஷீருக்கு விசுவாசமான ஜன்ஜாவீத் போராளிகள், அரசாங்கத்திற்கு ஆதரவாக அட்டூழியங்களில் ஈடுபட்டுவந்ததை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment