நைஜீரியாஇளைஞன் யாழில் கைது
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியில் வைத்து குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் இளைஞன் இலங்கையில் தங்கி நிற்பதற்கான விசா காலம் நிறைவடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , இளைஞன் தென்னிலங்கை யுவதி ஒருவரை திருமணம் செய்து தென்னிலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் , மன்னாருக்கு தனிப்பட்ட தேவைக்காக சென்று , அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் பொலிசாரிடம் இளைஞன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment