முல்லைத்தீவில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் அவர்களுடன் குறித்த வீட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Post a Comment