வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி
யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மக்களின் காணிகள் மக்களுக்கே எனவும் , விரைவில் முப்படைகளின் வசமுள்ள தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிப்போம் என ஜனாதிபதி முதல் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நகுலேஸ்வரம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 2 ஏக்கர் காணியினை , கடற்படையின் ரேடர் அமைக்க சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பகுதியில் கடற்படையினர் சுமார் 300 ஏக்கர் தனியார் காணியினை அபகரித்து வைத்துள்ளனர். அவற்றில் சில காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் இன்னமும் அக்காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் காணியினை உத்தியோகபூர்வமாக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment