யாழில். பொலிசாரின் கைதில் இருந்து தப்பி ஓடிய இளைஞன் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிசாரிடம் இருந்து தப்பியோடி புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் இளைஞன் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளான்.
இந்நிலையில் கடந்த முதலாம் திகதி நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ய முற்பட்ட வேளை , இளைஞன் போலீசாரிடம் இருந்து தப்பித்து , புகையிரத பாதையை கடந்து ஓட முற்பட்ட வேளை புகையிரதம் மோதி படுகாயமடைந்துள்ளான்
படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment