கிளியில் வாடகைக்கு அரச கட்டடமாம்!



கிளிநொச்சியில் அமைந்திருந்த சதோச விற்பனை நிலையம் — நான்கு மாடிகளுடன் 15,000 சதுர அடியளவில் அமைந்த கட்டிடம் — இன்று மாதம் ரூ. 2 இலட்சம் என்ற மிகக் குறைந்த வாடகைக்கு, 10 ஆண்டுகளுக்கு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கே அரசாங்கம் அந்தக் காலத்தில் ரூ. 200 மில்லியன் செலவிட்டது. இன்று அதே கட்டிடத்தை அமைக்க ரூ. 500 மில்லியன் வரை செலவாகும். இன்றைய கிளிநொச்சி A9 வீதியில் வெறும் 1,500 சதுர அடிக்கே ரூ. 2 இலட்சம் வாடகை கேட்கும் சூழலில், 15,000 சதுர அடியளவிலான கட்டிடத்தை அதே தொகைக்கே கொடுத்தது எப்படி சாத்தியம்? என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இது வெளிப்படையான அரச சொத்து மோசடி.இது ஊழல்.இது பொதுமக்களின் சொத்துக்களை தனிப்பட்ட நலனுக்காக துஷ்பிரயோகம் செய்தது. நான் 2025 ஏப்ரல் 21ஆம் தேதி கிளிநொச்சியில் நேரில் சென்று இதை அவதானித்தேன்.

இது மட்டும் அல்ல — இதுபோன்ற பல வேலைத்திடங்கள் மற்றும் திட்டங்களில் பண மோசடிகள் வடமாகாணம் முழுவதும் நடந்து உள்ளன இந்த நிலையை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி, இதற்கு பொறுப்பான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பொதுமக்களின் சொத்து மக்களுக்கே திரும்ப வேண்டும் — இது எங்களின் நிலைப்பாடு என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்

No comments