தொடரும் மகிந்த குடும்ப வேட்டை!
மகிந்த ராஜபக்ச தரப்பினை இலக்கு வைத்து அனுர அரசின் கைதுகள் தொடர்கின்றது.அவ்வகையில் லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னி ஆராச்சியை அக்டோபர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டிருந்தார்.
28 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அவர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத சொத்துக்களை குவித்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே நியாயமான காரணங்கள் இன்றி, 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து ரிசாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி அடிப்படை உரிமைகள் மனுவை ரிசாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்திருந்தார்.
Post a Comment