யாழில். பெண் சட்டத்தரணி கைது


யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை பொலிஸார் சென்று அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக பொலிஸார் நடந்து கொண்டதாகவும் , பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments