வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை


வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

அக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது . 


No comments