யாழில். இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேநபர் வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் கைது


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தெரிய வந்ததை அடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு , இளைஞனை கைது செய்தனர். 

அதன் போது வீட்டில் இருந்து கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் , சிறு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையடக்க தொலைபேசி என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments