கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு


கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர்,  வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறியது.

குறித்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் கேதீஸ்வரன் (வயது 50) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments