மாட்டு இறைச்சியுடன் முல்லைதீவில் மூவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டிறைச்சியுடன் மூவர் நேற்றுப் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோதமாக மாடு ஒன்று வெட்டப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் மற்றும் வள்ளிபுனம் பகுதி பொது சுகாதார பரிசோதகர் றொஜ்ஸ்ரன் மற்றும் விசுவமடு பகுதி பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் ஆகியோர் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட இறைச்சிகளை கைப்பற்றி மூவரை கைதுசெய்தனர்.
குறித்த மாடு பசு மாடு என்பதுடன் சுகாதார சீர்கேட்டுடன், சட்டரீதியற்ற இடத்தில் சட்ட ரீதியற்ற முறையில் இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறைச்சி மாதிரியையும், குறித்த மூவரையும் காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு முற்படுத்தப்படவுள்ளனர் .
குறித்த வள்ளிபுனம் தேவிபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக பசு மாடுகள் களவாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment