முட்கொம்பன் சந்தை திறப்பு!




பூநகரி முட்கொம்பன் பகுதி பொதுமக்களது நலன்கருதி கட்டிமுடிக்கப்பட்ட முட்கொம்பன் பொதுச்சந்தை இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கபட்டுள்ளது.பூநகரி பிரதேசசபை தவிசாளர் சிறீரஞ்சன் மற்றும் துணைதவிசாளர் தலைமையில் முட்கொம்பன் பொதுச்சந்தை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யுத்த காலங்களில் பூநகரியின் வாடியடி மற்றும் அயலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளை முட்கொம்பன் அவர்களிற்கு அடைக்கலம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் கிட்டாத பிரதேசமாக முட்கொம்பன் அமைந்துள்ள நிலையில் முக்கியதொரு படிக்கல்லாக பொதுச்சந்தை அனைத்து வசதிகளுடனும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்துவருங்காலங்களில் ஜந்து கடைத்தொகுதிகள் கொண்ட கட்டடத்தொகுதியொன்றும் முட்கொம்பனில் நிர்மாணித்துவழங்கப்படுமென தவிசாளர் சிறீரஞ்சன் தனது உரையில் உறுதியளித்துள்ளார்.


No comments