கொடிகாமத்தில் விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் சுன்னாகம் தெற்கு பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய சங்கீதா என்பவரே உயிரிழந்தவராவார்.

கொடிகாமம் நட்சத்திர மஹால் திருமண மண்டபத்திற்கு அருகாமையில் பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

காங்கேசந்துரையிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி தொடருந்து கொடிகாமம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது பெண் ஒருவர் கொடிகாமம் நட்சத்திரமஹால் திருமண மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள கடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெண்ணின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் பளையை பிறப்பிடமாக கொண்டவர் எனவும் பளைப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments