காணாமல் போன பாடசாலை ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டார்!
உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் காணாமல் போன நிலையில் இன்று செவ்வாய்க்கிழமைகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடபுஸ்ஸல்லாவ டலோஸ் த.ம.வித்தியாலயத்தின் கணித பாட ஆசிரியர் முரலிதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் குழுவொன்று போபுருதிய பகுதிக்கு சுற்றுலா சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போபுருதிய நீர்வீழ்ச்சியின் கீழ் நீரோடையில் ஆசிரியர்கள் நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆசிரியர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல்போன ஆசிரியரை தேடும் பணியில் நுவரெலியா பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள், அம்பகஸ்டோவ காவல்துறை, உள்ளூர்வாசிகள் இணைந்து மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம் இரவு வரை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணியின் போது காணாமல் போன ஆசிரியரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார்தெரிவித்தனர்.
அதனையடுத்து இன்று காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணியின் போதே குறித்த ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Post a Comment