கொழும்பில் தொடரும் துப்பாக்கி சூடு - இன்றும் இளைஞன் மீது துப்பாக்கி சூடு


மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இன்றைய தினம் புதன்கிழமை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வணிக இடத்தில் இருந்த ஒரு இளைஞனை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ரி 56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments