ஜனநாயக தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் வேலைத்திட்டம்
ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட
தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச ஜனநாயக தினம் செப்ரெம்பர் 15 ஆம் திகதியான இன்றைய தினம் உலகின் ஜனநாயகம் மிக்க நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் நிலையில் குறித்த நிகழ்வின் விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
200 இற்கும் அதிக நாடுகள் இருக்கும் சூழலில் 196 நாடுகளில் இந்த ஜனநாயக தினம் கொண்டாடப் படுகின்றது.
ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல அந்த நிலையை மக்களிடையே கொண்டு சென்று இலக்கை அடைவதுமாகும்.
குறிப்பாக இளம் பிரைஜைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் நவீனத்துவங்களை உள்வாங்குதல் என்பனவும் இதில் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய பொறிமுறைகளாக இருக்கின்றன.
இதனடிப்படையில் நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மற்றும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படும் இந்த விழிபுணர்வு நிகழ்வுகளின் முதன்மையானதாக தேர்தல் திணைக்களத்துடனான தகவல் தொழில் நுட்பத்தின் வகிபாகத்தை நெடுந்தீவு மக்களுக்கு கொண்டுசெல்வதாக உள்ளது என தெரிவித்தார்.
Post a Comment