யாழில். தான் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் தானே சிக்கி ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவரது மரவள்ளி தோட்டத்தை பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக , தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமான முறையில் மின் வேலி அமைத்துள்ளார். இரவு வேளைகளில் மாத்திரம் , வேலிக்கு மின் இணைப்பினை வழங்கி விட்டு , காலையில் அதனை துண்டித்து விடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பினை துண்டிக்க மறந்து , வேலியை தொட்ட வேளை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
அது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைதத்ததுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment