திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், தமிழர் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செம்மணியில் மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தமு.

திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செம்மணி சிந்துபாத்தி புதைகுழி பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன.

சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவைத் தழுவிக்கொண்டிருந்தார்.

இதனிடையே நல்லூரில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றினால் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. அதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என்ற கருத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முரண்பட்டிருந்தனர்.

ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், தமிழர் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

No comments