கொத்து கொத்தாக கொலை செய்து புதைத்தனரா?



செம்மணி மனிதப்புதைகுழியில் இன்று புதன்கிழமை மேலும் 09 மனித எலும்புக்கூடுகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரையான 51 நாட்கள் அகழ்வுப்பணியின் போது மொத்தம் 231 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 213 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய அகழ்வில் கண்டறியப்பட்ட சில எலும்புக்கூடுகள்  சிக்கலான முறையில் குவியலாக வெளிப்பட்டன.அவ்வகையில் வெளியிடங்களில் கொல்லப்பட்ட பின்னர் சடலங்களாக வீசியெறியப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதனிடையே செம்மணி வழக்கை கையாண்டு வந்த யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவிற்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.மேல்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கினை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தமை தொடர்பில்  நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா பாராட்டுக்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments