சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு !





சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு வணக்கம் இன்று (09) பி.ப 5.30, மணிக்கு நினைவுத்தூபியில் தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலைத்தப்பட்டது.

கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அப் படுகொலை நடைபெற்றதாகக் கூறப்படும் இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுத்  தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments