அனுர அரசின் நாடகம்:உளறும் கம்மன்பில!
தற்போதைய அரசாங்கம் பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஸ் சலே ஆகியோரை கைது செய்து பெரும் நாடகம் ஒன்றை நடத்திவருவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தான் சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒன்றும் கேட்கவும் இல்லை எனக்கு ஒன்றும் தெரியாது என கூறியதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் சானி அபேசேகர மற்றும் பொதுப் பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இலங்கையில் இருக்கும் பெரும் பொய்யர்கள்.
2017 ஆம் ஆண்டு விஜயகாந்தன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் புலனாய்வு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு சிங்களம் வாசிக்க தெரியாது. கதைக்க மட்டும் தான் தெரியும். குறித்த ஆவணங்களை வைத்துக் கொண்டு தான் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, நிசாந்த உலுகேதென்ன, சுனித் ரணசிங்க மேலும் பலரை பொய்யான வழக்கில் சம்பந்தப்படுத்த தான், நிசாந்த சில்வா மற்றும் கொமாண்டோ கிசான் வெலகெதர ஆகியோர் பொய்சாட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
விஜகாந்தன் அது பற்றி எனக்கு தெரிவித்த நிலையில் நான் 2017 டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக முன்னிலையாகி இவரிடம் பொய்சாட்சியம் பெறப்பட்டுள்ளது
இறுதியாக நிசாந்த உலுகேதென்ன கைதில், பாரதி அல்லது தம்பிள்ளை மகேஸ்வரன் என்ற திருகோணமலையை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவரின் சாட்சிகள் பெறப்பட்டுள்ளது.
அதுவும் புனையப்பட்ட பொய்சாட்சி என்று தான் 2025 ஓகஸ்ட் 05 ஆம் திகதி ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தேன்.
அவர்களால் புனையப்பட்ட சாட்சிகளில் யாரையாவது கைது செய்து, நாங்கள் கள்வர்களை பிடித்து விட்டோம் என மக்களுக்கு நடத்தும் நாடகத்தை செய்ய முடியாது என்பதால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறினார், யாரையாவது கைது செய்ய முடியாவிட்டால் சட்டம் இயற்றியாவது சிறையில் அடைப்போம் என்றார் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Post a Comment