சந்திரிகா பரிதாபம்:கொழும்பில் வீடில்லையாம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதிகளுக்கான உரிமைகள் இரத்துச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வீடின்றி அல்லாடுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னும் இரண்டு மாதங்களில் தன் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடறி விழுந்ததில் இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், உடல்நலக் காரணங்களால் தற்போது அசைவதில் சிரமம் உள்ளதாகவும், மகன் குடியேறுவதில் உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசிடம் வாடகை செலுத்தி அதே இல்லத்தில் தொடர அனுமதி கேட்டிருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டதாகவும், இதுவரை அந்த இல்லத்திற்கான பழுது பார்க்கும் பணிகளில் தனிப்பட்ட முறையில் ரூ. 14 மில்லியன் செலவிட்டதாகவும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய அரசு கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்காமல் முன்னாள் ஜனாதிபதிகளை வீடுகளில் இருந்து வெளியேற்றுவதையே முன்னிலைப்படுத்துகிறதெனவும் சந்திரிகா குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
Post a Comment