டக்ளஸ் விசாரிக்கப்படவேண்டும் :சிறீதரன்!



டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா  எனும் சுப்பையா பொன்னையா என்பவர்  ஊடகவியலாளர்கள் நிமலராஜன், அற்புதன் .  நிக்கிலஸ் ஆகியோரை  ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்வது என்று  ஊடக சந்திப்பு நடத்தி அறிவித்துள்ளார்.

எனவே கொலைகள்  தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா? எனக்கேள்வி எழுப்பியுள்ளார் தமிழரசுக்கட்சியின்  யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன்,

ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகாலமாக ஒன்றாக இருந்த சதா  எனும் சுப்பையா பொன்னையா என்பவர்  கடந்த 09 ஆம் திகதியன்று யாழ். ஊடக மையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி வெளிப்படையாக சிலவற்றை அறிவித்துள்ளார். அத்துடன் ஈ.பி.டி.பி தான் பல கொலைகளை செய்ததாகவும் சதா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

நிமலராஜனின் கொலை முறையாக விசாரிக்கப்படவில்லை  என்று சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. அனுர அரசும் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கின்றது. இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு மறுக்க வேண்டும்?. வெளியக பொறிமுறைக்குள் வராவிடின் இந்த நாட்டில் நீதி ,சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஒருபோதும்  உறுதிப்படுத்தப்படாது எனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 


No comments