அனுர வாய் திறக்க மறுக்கிறார்?
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் காற்றாலை,கனிய மண் அகழ்விற்கு எதிரான போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 41 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
மன்னார் மக்களின் இருப்பிடங்களையும்,வாழ்விடங்களையும், பாதுகாக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மக்கள் மற்றும் இளையோர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (12) 41 ஆவது நாளை கடந்து செல்கின்றது.
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தொடர்பாக ஜனாதிபதியால் ஒரு மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலக்கெடு இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.
இதுவரை எந்த முடிவுகளும் ஜனாதிபதியிடம் இருந்து எமக்கு கிடைக்கவில்லை. முக்கிய மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு முன் வைத்தோம்.புதிதாக அமைக்கப்பட்டு வரும் 04 காற்றாலைகள்,மேலும் அமைக்கப்படவுள்ள 10 காற்றாலை வேலைத்திட்டங்களும் உடன் நிறுத்தப்பட்டு, குறித்த திட்டம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து கணிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட கூடாது.தடை செய்ய வேண்டும் என போராட்டக் குழு சார்பாக ஜனாதிபதியிடம் குறித்த மூன்று கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளதாகவும் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
Post a Comment