ரவிராஜ் கொலையாளியே ஜஸ் வியாபாரியாம்!

 



தென்னிலங்கையின் மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனக் கிடங்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மகிந்த தரப்பின் நெருங்கிய சகா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான  பியல் மனம்பேரி நாரஹேன்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் அப்போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலருடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக கோத்தபாய மற்றும் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய சகாவென அடையாளம் காணப்பட்டவரெனவும் தெரியவந்துள்ளது. 

தென்னிலங்கை “மித்தெனிய, தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில், ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்காக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனம் நாட்டிற்கு முன்கூட்டியே அறிவித்ததாக காவல்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

கொள்கலன் எண்களுடன் கூடிய உளவுத்துறை தகவலின் படி, இரண்டு கொள்கலன்களும் ஈரானின் தெஹ்ரானில் இருந்து இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் போதைப்பொருள் இருந்ததாகவும் புலனாய்வு தகவலில் குறிப்பிடுகிறது.

இந்நிலையில் கொள்கலன்களை தருவித்ததாகவே பியல் மனம்பேரி கைதாகியுள்ளார்.


No comments