யாழ் குரும்பசிட்டியில் வாள்வெட்டு: இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகாயம்!
யாழ்பாணம் குரும்பசிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை (11) காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
Post a Comment