மனதில் பயமில்லையெனில் ஏன் அச்சம்?
மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் உள்நாட்டு பொறிமுறையில் செயல்படுவதாகவே கூறியுள்ளார். ஆனால் ஆணையாளர் வெளிநாட்டு பொறிமுறை சிறந்தது என்று கூறியுள்ளார்.
எவ்வாறினும் உள்நாட்டு பொறிமுறையில் நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் ஒவ்வொரு அரசாங்கமும் உள்நாட்டு பொறிமுறையே கூறி வந்துள்ளன. இதில் இனப்படுகொலை செய்த இராணுவம், புலனாய்வுத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல்சாதிகளும் பாதுகாக்கப்படுவர். அதனாலேயே வெளிநாட்டு அனுசரணையில் வெளிநாட்டு பொறிமுறை அடிப்படையில் தீர்மானம் நடைமுறை படுத்தப்பட வேண்டும்.
இனப்படுகொலை செய்த இராணுவம், புலனாய்வு பிரிவு அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் ஒட்டுக் குழுக்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே நீங்கள் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்கவில்லை.
முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் செம்மணி போன்ற எத்தனையோ இடங்களில் இலட்சக்கணக்கான கொலைகள் நடந்துள்ளன. அதற்கான நீதியை நாங்கள் கோரி நிற்கின்றோம். உள்நாட்டு பொறிமுறையில் இதற்கு நீதி கிடைக்காது என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்றுக்கொண்டு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் சர்வ தேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர் பானவிவகாரங்களைக் கையாள ஒரு சுயாதீ னமான விசேட ஆலோசகர் உட்பட ஒரு பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்திய துடன் இந்த நடவடிக்கைகளுக்கு மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடு பாடு அவசியமானது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment