நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்கள் ஒரு படகில் , நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றியுள்ளனர்
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு அழைத்து சென்ற கடற்படையினர் , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment