அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதி


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 5 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments