தொல்லியல் திணைக்களமே.. பௌத்த சின்னங்களை பாதுகாப்பது போல் தமிழரின் மரபுரிமை சின்னங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடு"
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரி மந்திரிமனை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனான சங்கிலிய மன்னன் காலத்து மந்திரிமனை எனவும் , தொல்லியல் சின்னமாகவும் அறிவிக்கப்பட்ட மந்திரிமனை கடந்த 17ஆம் திகதி யாழில் பெய்த மழை காரணமாக அதன் ஒரு பாகம் இடிந்து விழுந்திருந்தது.
குறித்த தொல்லியல் சின்னத்தை தொல்லியல் திணைக்களம் பாதுகாக்க தவறி விட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட போதிலும் , அது தனியார் காணிக்குள் அமைந்துள்ள தனியார் சொத்து எனவும் அதனால் தம்மால் அதனை மீள்புனரமைத்து பாதுகாக்க முடியவில்லை என தொல்லியல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க இளங்குமரன் மற்றும் சி. சிறிதரன் ஆகியோர் மந்திரிமனையை பார்வையிட்டு ,அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் "இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு ", " தொல்லியல் திணைக்களமே .." பௌத்த சின்னங்களை பாதுகாப்பது போல் தமிழரின் மரபுரிமை சின்னங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடு ", " மன்னன் சொத்து மக்கள் சொத்து " போன்ற கோஷங்களை எழுப்பி மந்திரிமனை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment