மன்னாரில் மக்கள் மீது பொலிஸார் தடியடி - இரவிரவாக தொடர்ந்த பதட்டம்


மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது 

மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்..

இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத  முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்





No comments